- Home
- உடல்நலம்
- Walking : வெறும் 15 நிமிடங்கள் 'இப்படி' நடந்தால் போதும்.. நீண்ட ஆயுள்; அன்லிமிடெட் ஆரோக்கிய நன்மைகள்!!
Walking : வெறும் 15 நிமிடங்கள் 'இப்படி' நடந்தால் போதும்.. நீண்ட ஆயுள்; அன்லிமிடெட் ஆரோக்கிய நன்மைகள்!!
தினமும் 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.

பொதுவாக நடைபயிற்சி உடல் இயக்கம், தசைகள் வலுவடைதல், நாள்பட்ட நோய்கள் கட்டுப்பாடு, நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது. அதிலும் மெதுவாக நடப்பதை விட சுறுசுறுப்பாக நடப்பது அகால மரணம் ஏற்படுவதை குறைப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் 15 நிமிடங்கள் வேகமாக நடந்தால் அகால மரண ஆபத்து தோராயமாக 20% குறையுமாம்.
வேகமாக நடைபயிற்சி செய்வது இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, கொழுப்பைக் குறைதல் ஆகியவற்றுக்கு உதவும். இதனால் இதய நோய்கள் அபாயம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோயை வரும் வாய்ப்புகளையும் குறைக்கிறது.
வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்கும். இதனால் ஆரோக்கியமான வளர்சிதை மாற்ற அமைப்பு உருவாகும். இதனால் எடையை கட்டுகுள் வைக்கலாம். வேகமான நடைபயிற்சி மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுவதால் இதய நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு மனநலமும் சீராக இருக்க உதவுகிறது. குறுநடைகள் எண்டோர்பின் சுரப்பைத் தூண்டி மனநிலையை மேம்படுத்துகிறது.
வேகமான நடைபயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் சிறந்த நினைவாற்றல், படைப்பாற்றல், சிந்தனை திறன்கள் கிடைக்க வழிவகுக்கிறது. இயற்கையான காட்சிகளை ரசித்தபடி, வீட்டுக்கு வெளியே அல்லது பூங்காவில் நடப்பதால் மன அழுத்த ஹார்மோன்கள் சுரப்பு குறைகிறது. பதட்டம், மனச்சோர்வு அறிகுறிகள் குறைகிறது.
தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. அதிலும் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்தால் ஆயுட்காலத்தை நீட்டிக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் பல நோய்களில் இருந்து தடுக்கிறது. இதயம், நுரையீரல், தசைகள் ஆரோக்கியம் மேம்படுகிறது. வெறும் நடைபயிற்சி மட்டும் ஆயுள் காலத்தை அதிகரிக்காது. நல்ல உணவு பழக்கம், சிறந்த தூக்கம் அவசியம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தலும் நீண்ட ஆயுள் காலத்துடன் தொடர்புடையது.