லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் காரணமா? பின்னணியில் நடந்த மிகப்பெரிய சூழ்ச்சி என்ன?
தளபதி விஜய் நடிப்பில் தயாராகி உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்தானதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Leo Poster
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடிகர் விஜய்யின் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இதன்மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் இப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டனர். திட்டமிட்டபடியே ஷூட்டிங்கை முடித்து படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யவும் தயாராகிவிட்டனர்.
Thalapathy vijay
லியோ படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் அதே அளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இதில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். விரைவில் அரசியல் கட்சியை விஜய் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுவதால், இந்த ஆடியோ லாஞ்ச் பேச்சில் அரசியலும் கலந்திருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் மண்ணை அள்ளி போடும் விதமாக நேற்று இரவு ஒரு அறிவிப்பு வந்தது.
Vijay, lokesh Kanagaraj
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிகளவில் பாஸ் கேட்டு அழைப்புகள் வருவதாலும், பாதுகாப்பு கருதியும் இந்த இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாகவும், அரசியல் அழுத்தத்தால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தது படக்குழு. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo movie audio launch
லியோ பட இசை வெளியீட்டு விழாவுக்கான செட் அமைக்கும் பணிகள் எல்லாம் நேற்று தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திடீரென படக்குழு இந்த முடிவு எடுக்க மற்றுமொரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். அது என்னவென்றால், போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது தான். லியோ இசை வெளியீட்டு விழா நடக்க இருந்த சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான். இங்கு அதிகபட்சம் 20 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கலாம்.
Leo vijay
இதற்காக லியோ படக்குழு சார்பில் ரசிகர் மன்றத்துக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை சிலர் போலியாக அச்சடித்து அதனை அதிக விலைக்கு விற்பனையும் செய்து வந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் தான் இந்த இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர்.
Leo Audio launch cancelled
இந்த ரத்து செய்யும் முடிவை படக்குழு எடுத்ததற்கு காரணம் சமீபத்தியில் நடந்து முடிந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி தான். அங்கு அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. லியோ ஆடியோ லாஞ்ச் நடந்தால் அதே போன்ற ஒரு நிலைமை தான் ஏற்படும் என்பதனால் படக்குழு இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர். மேலும் விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இப்படி சிலர் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டுக்கு இதுதான் காரணமா!