- Home
- Gallery
- லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டுக்கு இதுதான் காரணமா!
லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டுக்கு இதுதான் காரணமா!
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Leo Audio launch cancel reason
நடிகர் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் தான் அடுத்து வரக்கூடிய தமிழ் படங்களில் அனைவரும் எதிர்பார்க்கும் படமாகும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம், அனிருத் இசை, திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பெரும் பட்டாளமே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
Leo Audio launch
அடுத்த மாதம் 19ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் வேலைகள் பரபரக்க தொடங்கி இருக்கின்றன. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றன.
Leo Movie Audio launch
விஜய் படங்களின் ஆகப்பெரும் புரமோஷனாக அவர் படங்களின் இசை வெளியீட்டு விழாவும், அதில் அவர் பேசும் குட்டிக்கதையும் அமையும். ஆகையால், அவரது ரசிகர்கள் அதனை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
Thalapathy Vijay, Leo Movie
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவு ஒன்றில், ஆளும் கட்சியான திமுக, குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் உத்தரவுக்கு ஏற்ப லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அனுமதி கொடுக்கவில்லை” என்று பகீர் குற்றசாட்டை வைத்தார்.
Thalapathy Vijay Fans
லியோவின் தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, "ஐயா, இந்த செய்தி உண்மையல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள பதிவு விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
Leo Movie
அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.
Actor Vijay
லியோ தயாரிப்பாளரின் இந்த பதிவால் தளபதி விஜய் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு தள்ளப்பட்டனர் என்றே சொல்லலாம். பலரும் சமூக வலைத்தளங்களில் ஏன் இசை வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டது? அரசியல் காரணங்கள் இருக்கிறதா?சவுக்கு சங்கர் சொன்னது போல உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்கிறாரா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.