- Home
- Gallery
- லக்னோவை பஞ்சு பஞ்சாக்கிய அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் 208/4 ரன்கள் குவிப்பு!
லக்னோவை பஞ்சு பஞ்சாக்கிய அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் 208/4 ரன்கள் குவிப்பு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 64ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 64ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்துள்ளது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜாக் பிரேசர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் அபிஷேக் போரெல் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதில், அபிஷேக் போரெல் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழக்க, போரெல் 33 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
எனினும், பண்ட் 23 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அக்ஷர் படேல் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். மற்றொருபுறம் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படேல் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் நவீன் உல் ஹாக் 4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ரவி பிஷ்னோய், அர்ஷாத் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), குயீண்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் கூடா, நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா, யுத்விர் சிங் சராக், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹாக், மோசின் கான்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
டெல்லி கேபிடல்ஸ்:
அபிஷேக் போரெல், ஜாக் பிரேசர் மெக்கர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், குல்பதீன் நைப், ரசீக் தர் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.