Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் சர்ச் வளாகத்தில் பங்கு தந்தை மர்ம மரணம்; வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த நிலையில் விபரீதம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பாத்திமா திருத்தல உதவி பங்குத்தந்தை ஆரோக்கிய தாஸ் திருத்தல வளாகத்தில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

a father hanged death at church campus in tirunelveli district vel
Author
First Published May 14, 2024, 10:25 PM IST

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் கடந்த ஓர் ஆண்டாக உதவி பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இந்த ஆலயத்தில் நேற்று 10 ஆம் திருவிழா நடைபெற்றது. ஓராண்டு பணியை முடித்த ஆரோக்கிய தாஸ் பணி மாறுதலாகி சென்னை பொன்னேரிக்கு செல்ல இருந்தார்.

மயிலாடுதுறையில் ஓடும் பைக்கில் காதலியால் எரிக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி பலி

மேலும் இன்று  இரவு அவருக்கு வழி அனுப்பும் நிகழ்வும் நடைபெற இருந்தது. இரவு ஏழு மணி அளவில் அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கணவன் கொடூர கொலை - திருப்பத்தூரில் பரபரப்பு

மேலும் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டு, அவர் உயிழந்ததை உறுதி படுத்தியதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வள்ளியூர் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழியனுப்பு விழா  நடைபெற இருந்த நிலையில் உதவி பங்கு தந்தை மின் விசிறியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios