- Home
- Gallery
- Shivani Narayanan Photo: கண்ணுக்கு லென்ஸ் போட்டு.. கருப்பு உடை கவர்ச்சியில் ஸ்டன் ஆக்கிய ஷிவானி நாராயணன்!
Shivani Narayanan Photo: கண்ணுக்கு லென்ஸ் போட்டு.. கருப்பு உடை கவர்ச்சியில் ஸ்டன் ஆக்கிய ஷிவானி நாராயணன்!
பட வாய்ப்புக்காக கண் கட்டும் அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி... ஷிவானி நடத்தியுள்ள போட்டோ சூட் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலத்தை சேர்ந்த நடிகைகளின் வருகை தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த பெண்களும் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அப்படி சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், பள்ளி படிப்பை கூட சரியாக முடிக்காமல்.. சீரியல் வாய்ப்பு தேட துவங்கியவர் தான் விருதுநகர் பொண்ணு ஷிவானி நாராயணன்.
இவருடைய குடும்பத்தினர் சிலர் ஆரம்பத்தில் இருந்தே இவரின் ஆசைக்கு எதிராக போர் கொடி தூக்க... ஷிவானியின் ஆசைக்கு பக்க பலமாக நின்றவர், இவரின் தாயார் மட்டுமே.
பல சீரியல்களில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொண்ட இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'பகல் நிலவு' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்தார். ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சீரியலை விட்டு விலகி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... சீரியஸாக பட வாய்ப்பு தேடி வந்த ஷிவானிக்கு விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்தார். பின்னர் வீட்டுல விசேஷம், DSP, நாய் சேகர், பம்பர் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இவரின் கைவசம் ஒரு படங்கள் கூட இல்லாத நிலையில்... பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது கண்ணில் லென்ஸ் போட்டு... கருப்பு நிற டைட் டீ ஷர்ட்டில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக வருகிறது.