வெங்கட் இயக்கத்தில் தளபதி 68.. விஜய்க்கு வில்லன் இவர் தானா?.. மாஸ் காம்போ தான் போங்க - சூப்பர் அப்டேட் இதோ!
லியோ பட பணிகளை முடித்த பிறகு வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க சென்ற தளபதி விஜய், தற்பொழுது சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில், விரைவில் அவர் தனது 68 ஆவது திரைப்பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Venkat Prabhu
முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த சில அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. மேலும் இந்த பட பணிகளுக்காக மும்முரமாக வெங்கட் பிரபு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Simran and Priyanka Mohan
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் டூயல் ரோல் ஏற்றுநடிக்க உள்ளதாகவும், மூத்த விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் அவர்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல இளைய விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Aravind Samy
மேலும் இந்த திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் தொடர்ச்சியாக இணைந்து வருகிறார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி அவர்களும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அரவிந்த்சாமி கடந்த சில வருடங்களாக நல்ல பல வில்லின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே தளபதி 68 திரைப்படத்திலும் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல அரவிந்த் சாமி, நடிகர் விஜயின் அண்ணனாக நடிக்கவம் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம்வருகின்றது.