இரு சக்கர வாகனங்களுக்கு எதற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் தாக்கு!
மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்
பாதுகாப்பு மற்றும் உமிழ்வுகள் தொடர்பான அதிக கட்டுப்பாடுகள் இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் விலைகளை அதிகமாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், மோட்டார் சைக்கிள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பஜாஜ் நிறுவனத்தின் புனே ஆலையில் வெள்ளிக்கிழமை பல்சர் NS400Z வெளியீட்டு விழாவில் பேசிய ராஜீவ் பஜாஜ், கடந்த சில ஆண்டுகளில் வாகனங்களின் விலையில் வியத்தகு மாற்றத்திற்கு BS VI மற்றும் ABS விதிமுறைகள்தான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
அதிக கட்டுப்பாடு மற்றும் அதிக வரி விதிப்பால் பயணிகள் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். “BS VI மற்றும் ABS கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு, பல்சர் 150 பைக் ரூ.71,000 ஆக இருந்தது. இன்று அதே மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 150,000 ஆக உள்ளது. அதிக வரி விதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரனமாக இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் விலையை தேவையற்ற முறையில் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.” என அவர் கூறினார்.
நாம் ஏன் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ், நீங்கள் ஆசியான் நாடுகளில் உள்ள ஜிஎஸ்டிக்கு சமமான வரிவிதிப்பு பாருங்கள். அவை 8 சதவீதம், 14 சதவீதம்தான் என்றார். மேலும், இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12% ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஏப்ரல் மாதம் முதல், 125 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1, 2020 முதல், முந்தைய BS4 விதிமுறைகளை மாற்றியமைத்து, BS6 உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
BS6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச GST தேவையா? என கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ், இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12% ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்க தொழிலாளர்களை அடிக்கும் சீன மேலாளர்: இனவெறி சர்ச்சை!
பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் ராணியாக இருந்த மேரி-ஆன்டோனெட் பற்றி குறிப்பிட்ட ராஜீவ் பஜாஜ், “நாமும் நம் மக்களையும் கேக் சாப்பிடச் சொல்லப் போகிறோமா?” என கேள்வி எழுப்பினார். பட்டினியால் வாடும் விவசாயிகளுக்கு சாப்பிட ரொட்டி துண்டு இல்லை என்ற போது, கேக் சாப்பிட சொல்லுங்கள் என்றாராம் பிரான்ஸ் ராணி மேரி-ஆன்டோனெட். பட்டினி பற்றிய அவரது புரிதலை விளக்கம் இந்த கதையை மேற்கோள் காட்டு ராஜீவ் பஜாஜ் பேசியுள்ளார்.
சாதாராண மனிதனுக்கு ரூ.1 லட்சம் என்பது அதிகமான தொகை என்ற ராஜீவ் பஜாஜ், “வாகனத்தின் இயங்குச் செலவைக் குறைப்பதன் மூலம் இதை தணிக்க முடியும். அதனால்தான் நுழைவு-நிலை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் மின்சாரத்தால் இயக்கப்படுவது மற்றும் CNG என்ற இரு முனை உத்திகளை நாங்கள் கொண்டுள்ளோம்.” என்றார்.