TTF Vasan Arrest: வீலிங் செய்து வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய டிடிஎஃப் வாசன்.. ஹாஸ்பிடலில் வைத்தே கைது..!
காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் மூலம் மிகவும் பேமஸ் ஆனவர் டிடிஎப் வாசன். இவர் யூடியூப்பில் பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் மில்லியன் கணக்கில் பாலோவர்களை பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிவேகமாக பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் இருந்து தனது நண்பர்களோடு மகாராஷ்டிராவிற்கு பைக் ரைட் புறப்பட்டுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே தனது இருசக்கர வாகனத்தை வீலிங் செய்தபடி பயணித்துள்ளார்.
அப்போது நிலைதடுமாறிய டிடிஎப், சாலை தடுப்பின் மீது மோதியதில், இவர் ஒருபக்கம் தூக்கி வீசப்பட்டு கீழே விழ, பைக் அருகில் அந்தரத்தில் பறந்து பள்ளத்தில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாசன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக டிடிஎப் வாசனின் பைக்கை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது ஜாமீனில் வரமுடியாத வகையில் 5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க;- பைக்கில் வீலிங் செய்து கொடூர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..! உடல்நிலை எப்படி உள்ளது என தெரியுமா.?
இந்நிலையில் டிடிஎப் வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.