மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு... அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்! போட்டோஸ்
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சிம்பு, பிரபு தேவா முதற்கொண்டு பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர் இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
தமிழ் திரையுலகில் ஒரு படத்தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், என தன்னை தானே மெருகேற்றிக்கொண்டவர் விஜய் ஆண்டனி.
எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணித்து வரும் இவர், பிச்சைக்காரன் 2 திரைப்படம் வசூல் ரீதியாக இவருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுக்கொடுத்ததால் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார்.
விஜய் ஆண்டனி மகள் இறப்பில் அடையாளம் தெரிந்தது!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட்... உறுதி செய்த போலீஸ்!
பிச்சைகாரகனுக்கு தேவையான பொருட்களை வழங்கியது, அவர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் வைத்தது, மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய உதவ உள்ளதாக கூறியது போன்ற விஷயங்கள் இவர் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையை கூடியது.
இந்த நல்ல மனசுக்காரருக்கா இப்படி நடக்கணும்? ஆம் இவரின் 16 வயது மகள் மீரா... கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!! தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!
மீராவின் மரணம் யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இன்று காலை முதலே இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பிரபு தேவா, சிம்பு, கிருத்திகா உதயநிதி, பார்த்திபன், சத்யராஜ், சிபிராஜ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு நேரில் வந்து மீராவுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்றி, விஜய் ஆண்டனிக்கு ஆறுதல்களையும் கூறி வருகிறார்கள்.
விஜய் ஆண்டனியின் மகள் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், மீராவின் போஸ்ட் மாடம் ரிப்போர்ட்டில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கஷ்டமான தருணத்தின் வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த தருணத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினர் அதனை கடந்து வர நாமும் துணை நிற்போம் #StayStong என்கிற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.