Meena Scolding Kala: உங்க வேலைய பாத்துகிட்டு போங்க.! மீனாவிடம் செம்ம டோஸ் வாங்கிய கலா மாஸ்டர்..! ஏன் தெரியுமா?
நடிகை மீனாவிடம் இரண்டாம் திருமணம் குறித்து பேசி, திட்டுவங்கி கட்டிக்கொண்டதாக மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
Actress Meena
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக மட்டும் இன்றி.. சூப்பர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜயகாந்த், அர்ஜுன், கார்த்திக், உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் மீனா. 45 வயதை கடந்த பின்னரும் மெழுகு பொம்மை போல்... ரசிகர்கள் மனதை கவர்ந்திழுக்கும் மீனா, பொதுவாகவே மிகவும் மென்மையான குணம் கொண்டவர்.
Meena Marriage:
40 வருட திரையுலக வாழ்க்கையிலும் சரி, தன்னுடைய பர்சனல் வாழ்க்கையிலும் சரி பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பவர் என கூறலாம். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கிய இவருக்கு ஒரு கட்டத்திற்கு பின் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்து, குணச்சித்திர வேடம் தேடி வர துவங்கியதால், தன்னுடைய அம்மா பார்த்த மாப்பிள்ளையான பெங்களூரை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினீயர் வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
Meena Daughter Nainika:
பின்னர் தன்னுடைய மகள் நைனிகா பிறந்து, வளர்ந்த பின்னரே மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மீனா நடித்து வருகிறார். இந்நிலையில் மீனாவின் கணவர்... புறாக்களின் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தோற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், உயர்தர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Meena husband death:
கணவரின் மரணம் இவரை மன உளைச்சலில் ஆழ்த்தியது. இதனால் வீட்டிற்குள்லேயே முடங்கிய இவரை... மெல்ல மெல்ல வெளியுலகிற்கு கொண்டு வந்தது, இவரது தோழிகளும் இவரின் அம்மாவும் தான். தற்போது சகஜநிலைக்கு திரும்பியுள்ள மீனா, ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மலையாள படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
Second marriage rumor:
மீனாவின் கணவர் உயிரிழந்த பின்னர், அவ்வப்போது அவரின் இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளத்தில் வட்டமிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
Kamal Master Convinced:
இந்நிலையில் மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர், ஒருமுறை "மீனா உனக்கு சின்ன வயசு தான் ஆகிறது. உனக்கு வருங்காலத்தில் ஒரு துணை வேண்டும். எனவே நீ இரண்டாம் திருமணம் செய்து கொள் என்பது போல் பேசியுள்ளாராம்".
Meena Scolding:
இதைக்கேட்டு கடுப்பான மீனா "அக்கா உங்க வேலைய பாத்துட்டு போங்க. எனக்கு ஒரு மகள் இருக்கிறார். இனி நான் அவளை பத்தி தான் யோசிக்கணும். என இரண்டாம் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் பேசி விட்டதாக தெரிவித்துள்ளார்". இந்த தகவலை கலா மாஸ்டர் கூற, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.