குளிக்கும்போதும் ரொமான்ஸா... நீச்சல் குளத்தில் காத்துவாக்குல காதல் செய்த விக்கி - நயன்! வைரல் புகைப்படம் இதோ
நீச்சல் குளத்தில் தன் காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara Vignesh Shivan
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானு ரெளடி தான் படத்தில் பணியாற்றியபோது காதலித்தனர். அப்படத்தை போல் இவர்களது காதலும் சக்சஸ் ஆனது. சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சினிமாவில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். ஒருபக்கம் நயன்தாரா அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Nayan Wikki
மறுபக்கம் விக்கி தான் இயக்க உள்ள அடுத்த படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளிவந்த நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு... அதுவும் விக்கி டைரக்ஷன்ல..!
Nayanthara
சினிமாவை போல் நயனும், விக்கியும் பிசினஸிலும் கல்லாகட்டி வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம், லிப்பாம் என்கிற லிப்ஸ்டிக் கம்பெனி ஆகியவற்றை நடத்தி வரும் இவர்கள் இம்மாத இறுதியில் சரும பராமரிப்புக்கான அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றையும் தொடங்க உள்ளனர். அந்த நிறுவனத்துக்கு 9ஸ்கின் என பெயரிட்டுள்ளனர். அதற்காக நயன்தாராவை வைத்து விளம்பர ஷூட்டிங்கை விக்கி தான் எடுத்து வருகிறார்.
nayanthara, vignesh shivan latest photo
அதற்கான ஷூட்டிங் முடிந்ததும் இருவரும் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளியல் போடுள்ளனர். நீச்சல் குளத்தில் நயனும் விக்கியும் காத்துவாக்குல காதல் செய்யும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் குளிக்கும் போது கூட ரொமான்ஸா என கமெண்ட் செய்து வருகின்றனர். நயன் - விக்கியின் இந்த ரொமாண்டிக் புகைப்படம் தற்போது செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படியுங்கள்... செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?