விஜய் ஆண்டனி மகள் இறப்பில் அடையாளம் தெரிந்தது!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட்... உறுதி செய்த போலீஸ்!
விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது உடற்கூறாய்வு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
Vijay Antony Daughter Death:
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும், விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கியபடி மீரா இருந்ததை விஜய் ஆண்டனி 3 மணிக்கு பார்த்த நிலையில், உடனடியாக தன்னுடைய வேலையாட்கள் மூலம் கீழே இறக்கி, காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே மீரா இறந்துவிட்டதாக கூறிய தகவல் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினரை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது.
Meera Affected Depressions:
16 வயதே ஆகும் மீராவின் இந்த விபரீத முடிவு எடுக்க என்ன காரணம்? என பல்வேறு தகவல்கள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகி வருகிறது. மேலும் கடந்த ஒரு வருடமாகவே மீரா காவேரி மற்றும் அப்பல்லோ ஆகிய மருத்துவமனைகளில், மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்றுவந்ததற்கான ஆவணங்களை, விஜய் ஆண்டனி போலீசாரிடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!! தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!
Meera Post Modem Report:
இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது மீராவின் உடற்கூறாய்வு ரிப்போர் வெளியாகியுள்ளது. அதில் "மீரா தற்கொலை செய்து கொண்டதாகவே அடையாளம் காணாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்".
Celebrities Condolence:
மேலும் விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் நாளை கீழ்ப்பாக்கம் அல்லது தாம்பரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் மீராவின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பல பிரபலங்கள் விஜய் ஆண்டனியின் மகள் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.