MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vanitha Son : பிரபல இயக்குனரின் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரி

Vanitha Son : பிரபல இயக்குனரின் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரி

வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி, தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2024, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vanitha son Srihari

Vanitha son Srihari

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா மூன்று முறை திருமணமாகி விவாகரத்தானவர் என்பது அனைவரும் அறிந்ததே. வனிதா முதலாவதாக நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் உள்ளார். இதையடுத்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிய, மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கரம்பிடித்தார் வனிதா. இதுவும் ஓரிரு மாதத்தில் முடிவுக்கு வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Srihari

Srihari

வனிதா தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ஜோவிகா, விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதற்காக விதவிதமாக போட்டோஷூட்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜோவிகா ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த அப்டேட் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வனிதா மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மீட்டிங்ல கூட வில்லேஜ் குக்கிங் சேனல் தான் பாக்குறேன்... தமிழக யூடியூபர்களை வியந்து பாராட்டிய சிரஞ்சீவி

34
Srihari debut as hero

Srihari debut as hero

அதன்படி வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்குனர் பிரபுசாலமன் இயக்க உள்ளாராம். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பிரபு சாலமன் புது முகங்களை வைத்து இயக்கிய படங்கள் வரிசையாக ஹிட் அடித்துள்ளன. அந்த லிஸ்ட்டில் ஸ்ரீஹரி நடிக்கும் படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
prabhu solomon

prabhu solomon

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் தான் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமாகி பேமஸ் ஆனார். அதன்பின்னர் கும்கி படத்தின் மூலம் அவர் அறிமுகப்படுத்திய விக்ரம் பிரபு இன்று பிசியான நடிகராக வலம் வருகிறார். அதேபோல் கயல் படம் மூலம் அவர் அறிமுகப்படுத்திய நடிகை ஆனந்தி தற்போது பேமஸ் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இந்த வரிசையில் ஸ்ரீஹரியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... April Updates : கோட் பர்ஸ்ட் சிங்கிள் முதல் தலைவர் 171 டைட்டில் வரை... கோலிவுட்டின் ஏப்ரல் மாத அப்டேட்ஸ் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved