- Home
- Gallery
- Anchor DD : விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி..! அதற்கு அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ ஓகே சொல்வாரா?
Anchor DD : விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி..! அதற்கு அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ ஓகே சொல்வாரா?
தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி என்கிற டிடி, தனக்கு விவாகரத்தான நடிகர் மீது கிரஷ் இருப்பதாகவும் அவருக்கு ஓகே என்றால் திருமணம் செய்துகொள்வேன் எனவும் கூறி இருக்கிறார்.

anchor dd
ஸ்கூல் படிக்கும்போதே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, காஃபி வித் டிடி போன்ற சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமின்றி நடிகையாகவும் சினிமாவில் அவ்வபோது தலைகாட்டி வருகிறார்.
DD Neelakandan
அந்த வகையில் தனுஷின் பா பாண்டி, கவுதம் மேனன் இயக்கிய ஜோசுவா, சுந்தர் சி-யின் காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர கவுதம் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டிடி. இப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. பிசியான தொகுப்பாளினியாக வலம் வந்த டிடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் ஆனது.
இதையும் படியுங்கள்... Box Office : கவினை கைவிட்ட பேமிலி ஆடியன்ஸ்... ஸ்டார் படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் தூள் கிளப்பிய அரண்மனை 4
anchor Dhivya Dharshini
ஸ்ரீகாந்த் என்கிற தனது நண்பனையே காதலித்து திருமணம் செய்துகொண்டார் டிடி. ஆனால் இவர்கள் காதல் திருமணம் மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்த டிடி கெரியரில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் அவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீண்ட நேரம் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டார்.
Hrithik Roshan
அவ்வப்போது ஆடியோ லாஞ்ச் நிகழ்வுகளை மட்டும் தொகுத்து வழங்கி வரும் டிடி, ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடியபோது தனக்கு யார் மீது கிரஷ் என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார். அதன்படி, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் தனது கிரஷ் எனக்கூறிய டிடி அவரை திருமணம் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதாகவும் ஆனால் அவர் ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை என கூறி இருக்கிறார். நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்னர் தற்போது சபா அசாத் என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Tamannaah : க்ரீமி ஒயிட் சில்க் புடவையில் வெண்சிலை போல் மின்னும் தமன்னா.. அதன் விலை இத்தனை லட்சமா?