அரியலூரில் அம்மனின் 17 சவரன் தாலி செயின் பறிப்பு; சாமிக்கே விபூதி அடித்த மர்ம நபர்கள்

ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் சாமியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 17 சவரன் தாலி செயின், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை.

17 sovereign gold and silver theft from temple in ariyalur vel

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலை வழக்கம் போல  இரவு பூட்டிவிட்டு இன்று காலை கோவிலின் பூசாரி திறந்து உள்ளார். அப்பொழுது சாமியின் கழுத்தில் அணிவிக்கப் பட்டிருந்த தாலி செயின், தங்க காசு அடங்கிய 17 சவரன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமானதைக் கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். 

கஞ்சா குற்றவாளிகளை காவல் துறையே தப்பிக்க வைக்கிறது - அன்புமணி குற்றச்சாட்டு

உடனடியாக இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கோவிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருடன் கோவிலுக்குள் நுழைந்தது எப்படி என்று சந்தேகம் எழுந்தது.

மாய வலையில் விழவைக்கும் இளம் பெண்கள்; பின்னாடியே அரிவாளோடு வரும் ஆண் நண்பர்கள் - விசாரணையில் அதிர்ச்சி

அப்போது தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் சாமியின் கழுத்தில்  அணிவிக்கப் பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios