Asianet News TamilAsianet News Tamil

உலகில் முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து சென்ற அமெரிக்க போலீஸ்!

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Miami Beach Police Department uses Rolls Royce Ghost to drive recruitment sgb
Author
First Published May 13, 2024, 11:43 AM IST

உலகின் விலை உயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராயல்ஸ் கார் முதல் முறையாக கடற்கரை ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் போலீசார் இந்தக் காரில் ரோந்து செல்கின்றனர்.

அமெரிக்காவில் சொகுசு கார் பயன்பாடு சகஜமாக உள்ளது. ஆனால், இப்போது உலகில் முதல் முறையாக மியாமி கடற்கரையில் ரோந்து செல்லும் போலீசார் ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து செல்லும்போது எடுத்த வீடியோவை மியாமி காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வெளியே வேகத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் ரோந்துப் பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் யூஸ் பண்றீங்களா என்று வியப்புடன் ரிப்ளை செய்து வருகின்றனர். பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு கார் ரோந்து பணிக்கு வந்துவிட்டதா என்று சிலர் வேடிக்கையாகவும் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios