- Home
- Gallery
- April Updates : கோட் பர்ஸ்ட் சிங்கிள் முதல் தலைவர் 171 டைட்டில் வரை... கோலிவுட்டின் ஏப்ரல் மாத அப்டேட்ஸ் இதோ
April Updates : கோட் பர்ஸ்ட் சிங்கிள் முதல் தலைவர் 171 டைட்டில் வரை... கோலிவுட்டின் ஏப்ரல் மாத அப்டேட்ஸ் இதோ
கோடை விடுமுறை தொடங்கியதும் கோலிவுட் படங்களின் அப்டேட்ஸும் அடுத்தடுத்து வெளியாகும், அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள அப்டேட்ஸ் பற்றி பார்க்கலாம்.

Tamil Movie Updates in April 2024
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழ் படங்களின் அப்டேட்டுகள் கடந்த ஒரு மாதமாக பெரியளவில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தமிழ் படங்களின் அப்டேட்டுகளும் வரிசையாக வெளிவர உள்ளன. அந்த வகையில் ஏப்ரல் மாதம் ரஜினி, விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.

கோட் பர்ஸ்ட் சிங்கிள் (GOAT First Single)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட் ஒன்று வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாம். அது அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. அநேகமாக அது விஜய் பாடிய பாடலாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
வேட்டையன் டீசர் (vettaiyan Teaser)
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தன்று வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஹார்ட்டிஸ்க் கிடைச்சதா? ரஜினி மகள் போட்ட ஒரே ஒரு இன்ஸ்டா பதிவு... ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்
தலைவர் 171 டைட்டில் (thalaivar 171 title)
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் தான் தலைவர் 171. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்படும் என படக்குழுவே அறிவித்து உள்ளது.
தங்கலான் ரிலீஸ் தேதி (Thangalaan Release Date)
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஐ.சி டீசர் (LIC Movie Teaser)
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எல்.ஐ.சி. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Nayanthara : படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனாலும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய நயன்- அதுக்குன்னு இவ்வளவா?