Arun Vijay: ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி... அருண் விஜய் கொண்டாடிய பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!
நடிகர் அருண் விஜய், இன்று தன்னுடைய 46-ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கேக் வெட்டி, அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின், ஒரே மகனான நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்து கன்னுக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் அருண் விஜய். இவரின் தந்தை, சித்தி மஞ்சுளா உள்ளிட்ட அனைவருமே நடிகர்கள் என்பதால், இவரும் லயோலா கல்லூரியில் படித்து முடித்ததும், நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
அதன்படி 1995-ஆம் ஆண்டு 'முறை மாப்பிள்ளை' என்கிற படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் கிருத்திகா மற்றும் ராஜஸ்ரீ ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், அருண் விஜய்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
இதை தொடர்ந்து, பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளி திரிந்த காலம், கண்ணால் பேசவா என தொடர்ந்து காதல் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட படங்களிலேயே நடித்தார்.
ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், பல படங்கள் தோல்வியடைந்தது. மேலும் இவர் கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்த மலை மலை திரைப்படம், இவரை வேறு ஒரு கோணத்தில் ரசிக்கவைத்தது. இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோ என்பதை உடைத்தெறிந்த அருண் விஜய், கதையிலும், கதாபாத்திரத்திலும் அதிகம் கவனம் செலுத்த துவங்கினார்.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான 'என்னை அறிந்தால்' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம், அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து இவர் நடித்த குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, போன்ற படங்கள் இவரது ஹிட் லிஸ்டில் இணைந்து, முன்னணி நடிகராக மாற்றியது.
தற்போது இவரின் கைவசம் பாலா இயக்கத்தில் நடித்து வரும் வணங்கான், பார்டர், மிஷன் சேப்டர் 1 அச்சம் என்பது இல்லையே ஆகிய படங்கள் உள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ் சினிமாவில் மிகவும் சுறுசுறுப்பான நடிகராக இருக்கும் இவர், இன்று தன்னுடைய 46-ஆவது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் சேர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.