கேவலமான மனிதர் மன்சூர் அலிகான்.. வெட்கப்படுகிறேன்! த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் பதிவு!
லியோ படத்தில், த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை என்பது பற்றி ஒருவித ஆதங்கத்துடன் தவறாக சித்தரித்து மன்சூர் அலிகான் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மன்சூர் அலிகானுக்கு எதிராக பிரபலங்கள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தில் மன்சூர் அலிகான், இருதயராஜ் என்கிற ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், லியோ படத்தில் வில்லன் என்று கூறியதும், 90'ஸ் காலத்தில் தனக்கு ரேப் சீன் காட்சிகள் கொடுக்கப்பட்டது போல் இந்த படத்திலும் காட்சிகள் இருக்கும், த்ரிஷாவுடன் நானும் அப்படி நடிக்கலாம் என இருந்தேன். ஆனால் அவருக்கும் எனக்கும் ஒரு சீன் கூட இல்லை என மிகவும் மோசமான வகையில் மன்சூர் அலிகான் பேசி இருந்தார்.
Actress Trisha Krishnan
மன்சூர் அலிகானின் இந்த பேட்டியை பார்த்த நடிகை த்ரிஷா, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு போட்டிருந்த பதிவில்... "சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற பரிதாபத்திற்குரிய ஒருவருடன் திரையில் பகிர்ந்து கொள்ளாததை நல்லது என நினைக்கிறன். மேலும் என் திரையுலக வாழ்க்கையில் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என பதிவிட்டிருந்தார்".
Kushboo Sundar
இதை தொடர்ந்து த்ரிஷாவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பூ ட்விட்டரில் போட்டுள்ள பதிவில், "NCW இன் உறுப்பினராக, நான் மன்சூர் அலி கானின் பிரச்சினையை எனது மூத்த தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர் மீது நடவடிக்கை எடுப்பேன். இப்படிப்பட்ட, சுத்தமில்லாத மனம் படைத்த ஒருவரை விட்டுவிட முடியாது. நான் உடன் நிற்கிறேன் த்ரிஷா. எனது மற்ற சகாக்களைப் பற்றியும், நான் உட்பட, அனைவரை பற்றி இந்த மனிதர் மிகவும் கேவலமான மனநிலையில் பேசுகிறார். பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் கண்ணியத்தைக் கொண்டுவரவும் நாம் போராடும்போது, இத்தகைய ஆண்கள் நம் சமுதாயத்திற்கு கேடு என தெரிவித்துள்ளார்.
karthi suburaj
த்ரிஷாவுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், ஜிகர்தண்டா 2 பட இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் போட்டுள்ள பதிவில், அவர் ஒரு கேவலமான மனிதர்.. வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Malavika Mohanan
நடிகை மாளவிகா மோகனன், "இந்த ஆண், பெண்களை இப்படித்தான் பார்க்கிறார் & அவர்களைப் பற்றி இப்படி தான் சிந்திக்கிறார் என்பது வெட்கக்கேடானது, ஆனால் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இதைப் பற்றி வெளிப்படையாக பேச எவ்வளவு துணிவு என கேள்வி எழுப்பியுள்ளார்.
Mansoor Alikhan
இப்படி தொடர்ந்து பல பிரபலங்கள், மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசியுள்ள கருத்துக்கு தங்களின் எதிர்ப்பை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 'அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Mansoor Alikhan
திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா... நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.