'ஜெயிலர்' படம் சுத்த வேஸ்ட்.. இந்த படத்தின் அட்ட காப்பி! மோசமாக விமர்சித்து டோட்டல் டேமேஜ் செய்த பிரபல நடிகர்!
சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'ஜெயிலர்' படம் சுத்த வேஸ்ட் அந்த படத்தில் ஒன்றுமே இல்லை என பிரபல நடிகர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jailer
தளபதியை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், சுமார் ₹600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
மேலும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உச்சு குளிர்ந்து போன, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு ரூ.100 கோடி காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஆடம்பர காரை பரிசாக வழங்கினார்.
அதே போல் அனிரூத் மற்றும் நெல்சன் திலீப் குமார் இருவருக்கும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தார். பல தரப்பில் இருந்தும், பாராட்டுகளை குவித்து வந்த இந்த படத்தை, பிரபல நடிகர், இயக்குனர், எழுத்தாளர், என பன்முக திறமை கொண்ட, ரமேஷ் கண்ணா மிகவும் மோசமாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஜெயிலர் படம் குறித்து பேசியுள்ள இவர், கொஞ்ச நேரத்துக்கு பிறகு இந்த படத்தை பார்க்க முடியவில்லை. சிவாஜி நடிப்பில் வெளியான தங்க பதக்கம் படத்தின் கதை தான் இது, அதில் எப்படி மகன் கேட்டது செய்யும் போது சிவாஜி சுடுவாரோ... இதில் ரஜினி சுட்டு இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் ஒரு ஃபேமிலி டிராமா கதை இருக்கும். இதுல எல்லாரையும் சுட்டு கிட்டே வந்து கடைசியில புள்ளையையும் சுட்டுடுவாரு என தெரிவித்துள்ளார்.