Nayanthara: மேட்சிங்... மேட்சிங் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா! பர்த்டே ஸ்பெஷல் புகைப்படம் வைரல்
மேட்சிங்... மேட்சிங்... உடையில் தன்னுடைய கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார், என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல், ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
எனவே ரசிகர்கள் ஒரு பக்கம், நயன்தாராவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க, திரையுலகை சேர்ந்தவர்களும் மழை போல் தங்களின் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள். அதே போல் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள டெஸ்ட் படத்தில் இருந்து இவரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோடு மட்டும் இன்றி நயன்தாராவின் 75-ஆவது படமான அன்னபூரணி படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: ஒரு பிளேட் இல்லனா.. ஒரு ஸ்பூனாவது கொடுங்க! ப்ரோமோவில் நக்கலடித்த கமல்ஹாசன்!
கடந்த ஆண்டு தன்னுடைய குழந்தைகள் பிறந்து சில மாதமே ஆனதால், மிகவும் எளிமையாக கொண்டாடிய நயன்தாரா... இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நயன் விக்கி இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையில்... குழந்தைகளை தூக்கி வைத்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை, நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D