Trisha: என்னை கேவலமாக பேசி பாலியல் அவமரியாதை செய்துள்ளார் மன்சூர் அலிகான்! நடிகை த்ரிஷா அதிரடி குற்றச்சாட்டு!
நடிகர் மன்சூர் அலிகான் தன்னை மிகவும் கேவலமாக பேசிய வீடியோ ஒன்றை பார்த்ததாக நடிகை த்ரிஷா, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக இருப்பவர் மன்சூர் அலிகான், இவரை பற்றி முன்னணி நடிகையான த்ரிஷா திடீர் என, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று தான் பேசு பொருளாக மாறியுள்ளது.
https://www.instagram.com/p/CzzFh8xBE64/?utm_source=ig_web_copy_link
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், இருதயராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகானுக்கு எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுவில்லை என்றாலும்...ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இந்த கேரக்டர் பார்க்கப்பட்டது.
Mansoor Alikhan
இதை தொடர்ந்து, மன்சூர் அலிகான் மது நாட்டுக்கும் - வீட்டுக்கும் கேடு என்கிற, கான்செப்ட் அடிப்படையில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்க்கு இடையில் பல படங்களில் நடித்து வருகிறார்.
Mansoor Alikhan
கடந்த சில வருடங்களாக... இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் இவரின் கதாபாத்திரம் காமெடியாகவே சித்திரிக்கப்பட்டது. ஆனால் லியோ படத்தில், இவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கி லியோ சக்ஸஸ் மீட்டில் அழுதார். அதே போல் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தில் மன்சூர் அலிகானை வைத்து இயக்குவது மிஸ் ஆகி விட்டாலும், இவரை முக்கிய கேரக்டரில் கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என கூறி இருந்தார். அதே போல் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மன்சூர் அலிகானின் டெலீட்டட் சீனும் நல்ல வரவேற்பை பெற்றது.
Trisha
நடிப்பை தாண்டி, அரசியல், இயக்கம், தயாரிப்பு என ஆள் ரவுண்டராக இருக்கும் மன்சூர் அலிகான் பற்றி நடிகை த்ரிஷா, போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற பரிதாபத்திற்குரிய ஒருவருடன் திரையில் பகிர்ந்து கொள்ளாததை நல்லது என நினைக்கிறன். மேலும் என் திரையுலக வாழ்க்கையில் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
அதாவது சமீபத்தில் மன்சூர் அலிகான் கொடுத்த பேட்டியில், லியோ படத்தில் வில்லன் என்றதும், கண்டிப்பாக ரேப் சீன் இருக்கும், குஷ்பூ, ரோஜா போன்றவர்களை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி நடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் த்ரிஷாவை
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பொத்துன மாதிரி காஷ்மீருக்கு கூட்டிட்டு போட்டு, கூட்டிட்டு வந்துட்டாங்க, கண்ணுல கூட காட்டவில்லை என தெரிவித்திருந்தார். இந்த பேட்டி தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.