Nayanthara: உனக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது..! சிம்பு படத்தில் இருந்து விரட்டிவிடப்பட்ட நயன்தாரா?
நடிகை நயன்தாரா, சிம்பு படத்தில் தான் முதலில் அறிமுகமாக வேண்டியது. சிம்பு படத்தின் நாயகிக்காக நடந்த, ஆடிஷனில் கலந்து கொண்ட இவரை அப்படத்தின் இயக்குனர் ரிஜெக்ட் செய்த தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா, இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களின் சமூக வலைதளப்பாக்கத்தின் மூலம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Nayanthara Religion
மேலும் நயன்தாரா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களும் இன்றைய தினம், அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில்... நயன்தாரா, இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மிகப்பெரிய உயரத்தை எட்டி இருந்தாலும், இவரது வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அவரின் தோல்விகளும், ஆரம்பத்தில் இவர் சந்தித்த ரிஜெக்ஷனும் தான்.
நயன்தாரா மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இவரை தமிழில் ரசிகர்கள் ஹீரோயினாக பார்த்து ரசித்தது, 'ஐயா' படத்தில் தான். இந்த படத்திற்கு முன்னர், நயன்தாரா சிம்பு நடிப்பில் வெளியான படத்தில், அவருக்கு ஜோடியாக தான் நடிக்க இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதாவது இயக்குனர் VZ துரை இயக்கத்தில், சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா' படத்தில்... கோபிகா நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானது நயன்தாரா தானம். இந்த படத்தின், ஆடிஷனில் கலந்து கொண்ட போது, பதட்டத்தின் காரணமாக சரியாக நடிக்காத நிலையில்... உனக்கெல்லாம் நடிப்பு செட் ஆகாது நீ கிளம்புமா என அனுப்பிவிட்டாராம் இயக்குனர்.
Actress Nayanthara Chandramukhi
இந்த படத்தின் வாய்ப்பு நயன்தாரா கைகளில் இருந்து விலகினாலும், 'ஐயா' படத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார் நயன்தாரா. அதே போல் இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய, சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சுமார் 23 வருடங்களாக பல, சவால், நிறைய வெற்றி தோல்விகளை கடந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தையும் பிடித்தார். திருமணத்திற்கு பின்னரும், வெற்றிகரமாக கோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் படங்களிலும் கலக்கி வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D