என் வாழ்க்கையே இந்த 3 பசங்க தான்! குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கியூட் வீடியோ வெளியிட்ட நயன்தாரா!
நடிகை நயன்தாரா, தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நடிகை நயன்தாரா, நேற்று தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன், தன்னுடைய குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் இந்த வருடம் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை நயன்தாராவுக்கு தெரிவித்து வந்த நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து வரும் 'டெஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 'அன்னபூரணி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியானது.
மேலும் நயன்தாரா, கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று... வைரலான நிலையில், நேற்று இரவு நடிகை நயன்தாரா கணவர் மற்றும் குழந்தைகளுடன், பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்து கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிப்பு!
இந்த கியூட் வீடியோவில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இவர்களின் இரட்டை குழந்தைகளான உயிர் - உலகம் ஆகியோர், வெள்ளை நிற டீ-ஷர்ட் போட்டு கொண்டு... கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்துள்ளனர். நயன்தாரா ஒரு குழந்தையை தன்னிடம் வைத்திருக்க, விக்கி ஒரு குழந்தையை கையில் பிடித்து கொண்டு... நயன்தாரா கொடுக்கும் முத்தத்தை அனுபவிக்கிறார்.
இந்த வீடியோவை வெளியிட்டு, நயன்தாரா... "நான் அதிகமாகக் கேட்டிருக்க முடியாது, கடவுள் இந்த 3 பசங்களை என் வாழ்க்கைக்கு கொடுத்துள்ளார். ஐ லவ் யூ என் உயிர் உலகம், விக்கி என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.