மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிப்பு!

மன்சூர் அலிகான், நடிகைகள் பற்றி மிகவும் மோசமாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என, அறிக்கை வெளியிட்டு வன்மையாக கண்டித்துள்ளது.
 

South Indian Actors Association strongly condemned mansoor alikhan and trisha issue mma

நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷாவுடன் தனக்கு லியோ படத்தில் ஒரு காட்சி கூட இல்லை என்றும், அவருடன் ரேப் சீனில் நடிக்க ஆவலாக இருந்ததாக, நடிகைகளை கொச்சை படுத்தும் விதத்தில் பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில், நடிகை த்ரிஷா எக்ஸ் தளத்தின் மூலம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

மேலும் த்ரிஷாவுக்கு ஆதரவாக, பல பிரபலங்கள் பதிவு போட்டு வரும் நிலையில், தற்போது மன்சூர் அலிகான் பேச்சுக்கு, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி, நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

South Indian Actors Association strongly condemned mansoor alikhan and trisha issue mma

இந்த அறிக்கையில் கூறி இருபதாவது, "மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  

தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும். 
சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய திரு. மன்சூர் அலிகான் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது.  ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

South Indian Actors Association strongly condemned mansoor alikhan and trisha issue mma

கேவலமான மனிதர் மன்சூர் அலிகான்.. வெட்கப்படுகிறேன்! த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் பதிவு!

மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.  இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய  நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
South Indian Actors Association strongly condemned mansoor alikhan and trisha issue mma

'ஜெயிலர்' படம் சுத்த வேஸ்ட்.. இந்த படத்தின் அட்ட காப்பி! மோசமாக விமர்சித்து டோட்டல் டேமேஜ் செய்த பிரபல நடிகர்!

இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது, வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதில் சோகமும் கோபமும், இத்துறை சார்ந்தவர்களே அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது." 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios