ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா ஹைதராபாத்? டாஸ் வென்று பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 50ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா,அன்மோல்ப்ரீத் சிங், ஹென்ரிச் கிளாசென் (கேபட்ன்), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சென், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ரோவ்மன் பவல், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 18 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் மைதானத்தில் மோதிய 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஒட்டு மொத்தமாக ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடந்த 54 போட்டிகளில் 32 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ள்ளது. மேலும், 21 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.