MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வைகை புயல் முதல்.. காளி வெங்கட் வரை - 2023ல் ரசிகர்கள் மனதை நடிப்பால் நெகிழவைத்த டாப் 4 கோலிவுட் நடிகர்கள்!

வைகை புயல் முதல்.. காளி வெங்கட் வரை - 2023ல் ரசிகர்கள் மனதை நடிப்பால் நெகிழவைத்த டாப் 4 கோலிவுட் நடிகர்கள்!

Best Supporting Actors 2023 : தமிழ் சினிமாவில் இதுவரை பெரிய அளவில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகர்கள் பலர் உண்டு.

2 Min read
Ansgar R
Published : Dec 28 2023, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Soori

Actor Soori

அந்த வகையில் இந்த 2023ம் ஆண்டில் மக்கள் மனதை தங்கள் நடிப்பால் நெகிழவைத்த நடிகர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதுவரை நாயகனாக நடித்ததில்லை என்றபோதும், இந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான "விடுதலை" திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான சூரி மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டில் ஹீரோவாக உருவெடுத்து அதில் வெற்றி கண்ட ஒரு வெற்றி நடிகராக மாறியுள்ளார் சூரி.

தலைவர் 171.. லியோ பார்ட் 2 - ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இரு இனிப்பான செய்தி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

24
Kaali Venkat

Kaali Venkat

திரைத் துறையில் அறிமுகமாகிய 13 ஆண்டுகள் தான் ஆகின்றது என்றாலும் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் தான் காளி வெங்கட். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "முண்டாசுப்பட்டி" திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் 8க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள காளி வெங்கட் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களுடைய தந்தையாக இந்த திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு வரவேற்பு பெற்று இருக்கிறார் காளி வெங்கட். அநீதி திரைப்படத்தில் அவர் பேசும் பல வசனங்கள் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

34
MS Bhaskar

MS Bhaskar

தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை துவங்கி இன்று மிக மிகப் பெரிய குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் தான் எம்எஸ் பாஸ்கர். இந்த மனிதனுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கவில்லை என்கின்ற ஏக்கம் அவருடைய ரசிகர்கள் மனதில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தன்னிடம் கொடுக்கப்படும் எந்த விதமான கதாபாத்திரத்தையும் மிக மிக நேர்த்தியாக நடிக்க கூடிய ஒரு மிகச் சிறந்த கலைஞர் அவர். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இவ்வாண்டு வெளியான பார்க்கிங் திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார் எம் எஸ் பாஸ்கர்.

44
Vadivelu

Vadivelu

வைகை புயல் வடிவேலு, தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி அடையாளம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாத நிலையில், இவ்வாண்டு வெளியான மாரி செல்வராஜன் "மாமன்னன்" திரைப்படத்தில் அந்த மாமன்னராக தோன்றி நடித்து மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
காளி வெங்கட்
வடிவேலு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved