- Home
- Gallery
- டெல்லியின் நம்பிக்கை நட்சத்திரம் காலி – சுத்து போட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – தம்பி இது பிளே ஆஃப் ரேஸ்ல!
டெல்லியின் நம்பிக்கை நட்சத்திரம் காலி – சுத்து போட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – தம்பி இது பிளே ஆஃப் ரேஸ்ல!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜாக் பிரேசர் மெக்கர்க் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 200 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜாக் பிரேசர் மெக்கர்க். தொடக்க வீரராக களமிறங்கி எதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 330 ரன்கள் குவித்துள்ளார்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதில், 2 முறை 15 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். ஜாக் பிரேசர் மெக்கர்க் வரிசையாக 55, 20, 65, 23, 84, 12, 50, 21 என்று ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுத்தார். இவ்வளவு ஏன், டெல்லி அணியின் ஆலோசகரான வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஜாக் பிரேசர் மெக்கர்க்கை தக்க வைத்துக் கொள்வதற்கு ஹிண்ட் கொடுத்துள்ளார்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இந்த நிலையில் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை அர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரில் 2ஆவது பந்தில் தூக்கி அடிக்க முயற்சித்து நவீன் உல் ஹாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எப்போதும் முதல் பந்தை பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு விரட்டும் மெக்கர்க், அதே போன்று இந்தப் போட்டியில் சிக்ஸருக்கு விரட்டி முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இந்தப் போட்டியில் ஒரு ரன் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முதல் முறையாக இந்த சீசனில் மெக்கர்க் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.