MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தலைவர் 171.. லியோ பார்ட் 2 - ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இரு இனிப்பான செய்தி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

தலைவர் 171.. லியோ பார்ட் 2 - ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இரு இனிப்பான செய்தி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வெகு இளம் வயதில் மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று கூறினால் அது மிகையல்ல. இப்பொது அவர் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்கி வருகின்றார்.

2 Min read
Ansgar R
Published : Dec 28 2023, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Director Gnanavel

Director Gnanavel

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது திரைப்படமான "வேட்டையன்" பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் அந்த பட பணிகளை முடித்த பிறகு, வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்குகிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு.. மூச்சு விடுவதில் சிரமம்.. வெண்டிலேட்டர் சிகிச்சை!

24
Kamalhaasan

Kamalhaasan

மறுபுறம், ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவருடைய 171வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இரு முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

34
Super Star Rajinikanth

Super Star Rajinikanth

முதலில் தலைவர் 171 திரைப்படத்தைப் பற்றி பேசும்பொழுது, "இதில் என்னுடைய படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விஷயங்கள் இருக்காது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் இது ஒரு மாசான திரைப்படமாகத் தான் இருக்கும், அது அப்படித்தான் இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு கமர்சியல் திரைப்படம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

44
Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171-வது திரைப்பட பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் அவர் கார்த்தியை வைத்து இயக்க உள்ள கைதி 2 திரைப்பட பணிகளை துவங்க உள்ளார். இந்த இரண்டு பட பணிகளை முடித்த பிறகு லியோ திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாக துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லியோ இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதால் தலைவர் 171 மற்றும் கைதி 2 ஆகிய இரு பட பணிகளை முடித்த உடனே அவர் லியோ பட பணிகளை துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகின்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved