தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு.. மூச்சு விடுவதில் சிரமம்.. வெண்டிலேட்டர் சிகிச்சை!

கடந்த நவம்பர் 18ம் தேதி நுரையீரலில் சளி சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

DMDK leader Vijayakanth is affected by coronavirus tvk

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி நுரையீரலில் சளி காரணமாக சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டு விஜயகாந்த் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

DMDK leader Vijayakanth is affected by coronavirus tvk

இந்நிலையில், நேற்று முன்தினம்  மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது தேமுதிக தலைமை விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DMDK leader Vijayakanth is affected by coronavirus tvk

இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா? தேமுதிக வெளியிட்ட முக்கிய தகவல்.!

DMDK leader Vijayakanth is affected by coronavirus tvk

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.சண்முகம், ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயகாந்தும் ெகாரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios