- Home
- Gallery
- மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா? தேமுதிக வெளியிட்ட முக்கிய தகவல்.!
மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா? தேமுதிக வெளியிட்ட முக்கிய தகவல்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijayakanth
தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்சி நிகழ்வில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதுமாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
vijayakanth health News
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டு விஜயகாந்த் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
DMDK
இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார் பரிசோதனை முடிந்து நாளை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.