Super Singer 10.. வெளியான Results.. டைட்டில் வின்னர் யார்? டாப் 5 வெற்றியாளர்களுக்கு என்னென்ன பரிசுகள்?
Super Singer 10 Title Winner : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10வது சீசனுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடத்தை பிடித்தவர்கள் யார் என்பதை இப்பொது பார்க்கலாம்.
super singer
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த 18 ஆண்டுகளில் மொத்தம் 10 சீசன்களை கடந்து மிகவும் வெற்றிகரமான ஷோவாவாக இது நடந்து வருகின்றது. பிரபல பாடகி சின்மயி தான் முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
John Jerome
இந்நிலையில் இப்போது நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10வது சீசனில், டாப் 5 போட்டியாளர்களில் ஜான் வெற்றி மகுடத்தை சூட்டியுள்ளது பலரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சுற்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "நான் ஆட்டோகாரன்" பாடலை பாடி அரங்கை அதிராவிட்டார் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசளிக்கப்படுகிறது.
Jeevitha
ஜானை தொடர்ந்து டாப் 5 போட்டியாளர்களில், அனைவரது மனம் கவர்ந்த பாடகி ஜீவிதாவிற்கு முதல் ரன்னர் அப் வழங்கப்பட்டது. பல ரம்யமான பாடல்களை பாடி அசத்திய ஜீவிதாவிற்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது.
vaishnavi
மேலும் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து, இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை வென்றுள்ளார் பாடகி வைஷ்ணவி. வைஷ்ணவிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் முறையே 4 மற்றும் 5ம் இடம் பிடித்த ஸ்ரீநிதி மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
ரியல் காதல் காவியங்கள்... சினிமாவை மிஞ்சிய லவ் ஸ்டோரி - இந்த வார தமிழா தமிழாவில் செம கன்டென்ட்