கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் மாயம்!
தடுத்தாம்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த 20 போலீசாரில் 13 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சாப்பிடுவதற்கான வனப்பகுதியை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று உடன் சென்ற போலீசார் கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இதனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சி கல்வராயம் மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ய போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லையில் நடந்த துயரச் சம்பவம்! மாடு வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை!
அதன்படி, நாகல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் அடங்கிய குழு கல்வராயன் மலையில் சாராயம் தயாரிக்கும் ஊறல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தடுத்தாம்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த 20 போலீசாரில் 13 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சாப்பிடுவதற்கான வனப்பகுதியை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று உடன் சென்ற போலீசார் கூறியுள்ளனர்.
இதனால், காணாமல் போன 13 பேரையும் எஞ்சிய போலீசாரும் தேடிவருகின்றனர். இரண்டு மணிநேரத்திற்கு மேலாகத் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாயமான 7 பேரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
பூமி மீது மோதப்போகும் சிறுகோள்! தேதியைக் குறித்த நாசா விஞ்ஞானிகள்! என்ன நடக்கப்போகுதோ...