"வள்ளுவர் காலத்திலேயே அது இருந்திருக்கு".. கள்ளக்குறிச்சி சென்ற கமல் - மக்களை சந்தித்து ஆறுதல் - வீடியோ!
Kamalhaasan : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் உண்டு இறந்த நபர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கோர நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான திரு. கமலஹாசன் அவர்கள், இன்று கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல் உண்ணாமை" என்பது வள்ளுவர் காலத்தில் இருந்து வருகிறது.
ஆகவே நாம் தான் திறன் பட செயல்பட வேண்டும், அரசு இந்த குடிப்பழக்கத்தில் இருந்த மக்கள் மீள மனநலஆலோசனையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் விசச்சாராயம் குடித்து தாய் தந்தையை பறிகொடுத்த மூன்று குழந்தைகள் கோகிலா, ஹரிஷ் மற்றும் ராகவனை சந்தித்து ஆறுதல் கூறினார்.