- Home
- Gallery
- ஒரே டேபிளில் சாப்பிடும் எழில் - சுடர்! மாப்பிள்ளையை வைத்து மனோகரி ஆடிய கேம் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஒரே டேபிளில் சாப்பிடும் எழில் - சுடர்! மாப்பிள்ளையை வைத்து மனோகரி ஆடிய கேம் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடருக்கு விசா ஏற்பாடு செய்ய அது வீட்டிற்கும் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இந்த விஷயம் அறிந்த இந்து சுடர் வெளிநாடு போராளா? அவளோட கண்ணுக்கு மட்டும் தானே நான் தெரிவேன், அவ போய்ட்டா என்ன செய்வது என்று வருத்தப்படுகிறாள். பிறகு சுடர் வர இந்து அவளிடம் நீ வெளிநாடு போக போறியா? போகாத என்று பேசி தடுக்க முயற்சி செய்கிறாள்.
அதன் பிறகு குழந்தைகள் நான்கு பேரும் கூட்டு சேர்ந்து சுடர் நம்மளை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா, அவ வெளிநாடு போய்ட்டா நமக்கு கஷ்டமாக இருக்கும், சுடரை போக விட கூடாது என்று முடிவு செய்கின்றனர், சுடர் வந்ததும் எங்களை விட்டு போயிடாத என்று வருத்தப்படுகின்றனர்.
அடுத்து மனோகரியின் அப்பா கிஷோர் என்பவரை அழைத்து வந்து இவர் தான் மாப்பிள்ளை என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பிறகு எழில், கிஷோர், சுடர், மனோகரி என நான்கு பேரும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட் கிளம்பி வருகின்றனர்.
மனோகரியையும் கிஷோரையும் ஒரு டேபிளில் உட்கார வைத்து விட்டு எழிலும் சுடரும் ஒரு டேபிளில் உட்காருகின்றனர். எழில் சுடரிடம் நீ என் பசங்கள நல்லபடியாக மாத்திட்ட, உனக்கு என்ன வேணும் கேளு நான் வாங்கி தரேன் என்று சொல்லி சாப்பாட்டை வர வைத்து இருவரும் சாப்பிடுகின்றனர்.
அடிக்கடி இவர்களை கவனித்தவாறே இருக்கும் மனோகரி இவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை பார்த்து கடுப்பாகி மாப்பிள்ளை கிஷோர் மீது டீயை எடுத்து கொட்டி விடுகிறாள். அதன் பிறகு எல்லாரும் அப்செட்டாக வீட்டிற்கு வர கனகவல்லி மாப்பிள்ளை கிட்ட பேசுனியா எல்லாம் ஓகே தானே என்று கேட்க மனோகரி அமைதியாக இருக்கிறாள்.
பிறகு அங்கு நடந்த விஷயத்தை சொல்ல மனோகரி அவன் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசினான், அதனால் தான் அப்படி செய்தேன் என்று சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.