Asianet News TamilAsianet News Tamil

ரியல் காதல் காவியங்கள்... சினிமாவை மிஞ்சிய லவ் ஸ்டோரி - இந்த வார தமிழா தமிழாவில் செம கன்டென்ட்

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Zee Tamil Tamizha Tamizha june 23 episode promo viral gan
Author
First Published Jun 22, 2024, 10:41 AM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை கையில் எடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை மாற உள்ளது. 

இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்ட ரீமேக் படங்கள்... அடேங்கப்பா இத்தனை Remake படங்களில் நடித்துள்ளாரா?

வெளிநாட்டை சேர்ந்த நபரும் தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் சமூக வளையதளத்தின் மூலம் அறிமுகமாகி முதல் முறை நேரில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட கதையை தெரிவித்துள்ளனர். 

அதே போல் கேரளாவை சேர்ந்த பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் பாஷை ஒரு பிரச்சனையாக இல்லை, காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... 50 வயதில் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளாரா தளபதி? விஜய்யின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios