- Home
- Gallery
- விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்ட ரீமேக் படங்கள்... அடேங்கப்பா இத்தனை Remake படங்களில் நடித்துள்ளாரா?
விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்ட ரீமேக் படங்கள்... அடேங்கப்பா இத்தனை Remake படங்களில் நடித்துள்ளாரா?
நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது ரீமேக் படங்கள் தான், அந்த வகையில் அவர் நடித்த ரீமேக் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Kadhalukku Mariyadhai
காதலுக்கு மரியாதை
மலையாளத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அனியாதிபிரவு என்கிற திரைப்படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு படங்களையும் பாசில் தான் இயக்கி இருந்தார்.
Ninaithen Vandhai
நினைத்தேன் வந்தாய்
தெலுங்கில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த பெல்லி சண்டடி என்கிற திரைப்படத்தை நினைத்தேன் வந்தாய் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார் விஜய். இப்படம் 1998-ல் திரைக்கு வந்தது.
Priyamanavale
பிரியமானவளே
தமிழில் விஜய், சிம்ரன் நடித்து ஹிட்டான பிரியமானவளே படமும் ரீமேக் படம் தான். இது தெலுங்கில் கடந்த 1996-ம் ஆண்டு நாகார்ஜுனா நடித்த பவித்ர பந்தம் படத்தின் ரீமேக் ஆகும்.
Friends
ப்ரண்ட்ஸ்
விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தான் ப்ரண்ட்ஸ். இது மலையாளத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இந்த இரண்டு படங்களையும் சித்திக் தான் இயக்கினார்.
Badri
பத்ரி
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட தம்முடு திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு பத்ரி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
Youth
யூத்
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த யூத் திரைப்படமும் ஒரு ரீமேக் படம் தான். இது கடந்த 2000-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சிரு நுவ்வுதோ படத்தின் ரீமேக் ஆகும்.
Vaseegara
வசீகரா
தெலுங்கில் கடந்த 2001ம் ஆண்டு வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற நுவ்வு நாக்கு நசாவ் திரைப்படம் தான் தமிழில் விஜய் நடிப்பில் வசீகரா என்கிற பெயரில் ரீமேக் ஆனது.
இதையும் படியுங்கள்... அவர் அப்போவே அப்படி.. 22 ஆண்டுகளுக்கு முன் "அந்த" படத்தில் போடப்பட்ட அரசியல் விதை - தளபதியின் Flash Back!
Ghilli
கில்லி
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த கில்லி திரைப்படமும் ஒரு ரீமேக் படம் தான். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி.
Aadhi
ஆதி
நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ஆதி. இதுவும் ஒரு ரீமேக் படம் தான். தெலுங்கில் 2005-ல் வெளிவந்து ஹிட்டான அத்தநோக்கடே என்கிற படத்தின் ரீமேக் தான் ஆதி.
pokkiri
போக்கிரி
விஜய் - பிரபுதேவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான போக்கிரி திரைப்படம் தெலுங்கில் அதே பெயரில் மகேஷ் பாபு நடித்த படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Villu
வில்லு
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து பிளாப் ஆன வில்லு படமும் ஒரு ரீமேக் படம் தான். இது இந்தியில் கடந்த 1998-ம் ஆண்டு வெளிவந்த சோல்ஞர் படத்தின் ரீமேக் ஆகும்.
kaavalan
காவலன்
மலையாளத்தில் திலீப் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த பாடிகார்டு திரைப்படம் தான் தமிழில் காவலன் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார் விஜய். இந்த இரண்டு படங்களையும் சித்திக் இயக்கினார்.
velayudham
வேலாயுதம்
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு விஜய் சூப்பர் ஹீரோவாக நடித்த திரைப்படம் வேலாயுதம். இது தெலுங்கில் 2000-ம் ஆண்டு வெளிவந்த அசாத் படத்தின் ரீமேக் ஆகும்.
nanban
நண்பன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் தான் நண்பன். இது இந்தியில் ஆமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Box Office King Vijay : கோலிவுட்டின் ‘கோட்’... தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனது எப்படி? ஓர் அலசல்