- Home
- Gallery
- நயன்தாராலாம் சும்மா.. ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அவுட் ஃபிட்டில் கீர்த்தி சுரேஷ்! அதிரி புரிதி போஸ்
நயன்தாராலாம் சும்மா.. ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அவுட் ஃபிட்டில் கீர்த்தி சுரேஷ்! அதிரி புரிதி போஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ், ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக... செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ், தன்னுடைய அம்மாவுக்கு பின்னர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த இவர், ஹீரோயினாக அறிமுமானதும் மலையாள மொழியில் தான்.
தமிழிலும் நடிக்க வாய்ப்பு தேடிய கீர்த்தி சுரேஷுக்கு இயக்குனர் ஏ.எல்.விஜய், விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், இந்த படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ரஜினிமுருகன்' படம் கீர்த்தி சுரேஷை பட்டி தொட்டி என்றும் பிரபலமாகியது.
அப்படியே தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்த கீர்த்தி, தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து, பல இளம் நடிகைகளை பொறாமைப்பட வைத்தார்.
தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை கீர்த்தி பிடித்து விட்டாலும், இவரை தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பிரபலமாக்கியது சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்ட 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படம் கீர்த்தியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைத்தது மட்டும் இன்றி, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்... பாலிவுட் திரையுலகிலும் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படம் தான் தற்போது பேபி ஜான் என்கிற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் சமந்தா ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கிறார், ஹீரோவாக வருண் தவான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் பிசியாக நடித்தாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மனதை குளிர்வித்து வரும் கீர்த்தி, தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில்... ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து நயன்தாராலாம் கீர்த்தி ஸ்டைல் முன்பு நிற்கவே முடியாது என கமெண்ட் போட்டு சாத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்.