அறிமுகமான 10 ஆண்டில் 100 படங்கள்.. கமலின் வாழ்க்கை மாற உதவிய சூப்பர் ஹிட் ஹீரோ - யார் அவர் தெரியுமா?
இன்றைய தேதியில் உலக சினிமாவின் அடையாளமாக உள்ள ஒரு மாபெரும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். அவர்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவை, உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றதில் மாபெரும் பங்கு கமல்ஹாசனுக்கு உண்டு.
Actor Kamal
ஆனால் அண்மையில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், தற்கொலை குறித்து பேசும்பொழுது, நானும் இளம் வயதில் சினிமாவிற்கு வந்த புதிதில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்கொலை குறித்து யோசித்திருக்கிறேன் என்று பேசி இருந்தார். ஆனால் உலக நாயகனுக்கா வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று நாம் அனைவரும் ஆச்சரியத்துடன் தான் அவருடைய பேச்சை கேட்டிருப்போம்.
டிரைலரே அனல்பறக்குதே... தளபதிக்கே தண்ணிகாட்ட தயாரான ஷிவாண்ணா! லியோவை சீண்ட வருகிறது கோஸ்ட்
Kamal
ஆனால் அது உண்மைதான், சிறுவயதில் பல முன்னணி ஹீரோக்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் அவர் இளமைப் பருவத்தை எட்டும் பொழுது ஒரு நடன இயக்குனராகத்தான் தனது கலை பயணத்தை அவர் துவங்கி உள்ளார். அப்பொழுது வாய்ப்புகள் பெரிய அளவில் அவருக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த சூழலில் இருந்து அவருடைய சினிமா பாதையை, உலக நாயகன் என்கின்ற பட்டத்தை நோக்கி நகர உதவிய ஒரு மாபெரும் நடிகர் யார் தெரியுமா?
Jaishankar with kamal
அவர் தான் தமிழகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர். 1965 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இரவும் பகலும் என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசனின் ஆளுமை தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி ஸ்டைலில் அமைத்து, தான் திரைத்துறையில் அறிமுகமான 10 ஆண்டுகளுக்குள் 100 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரு மாபெரும் நடிகர்.
சுமார் 320க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார், அது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் 35 படங்கள் வரை நடித்த பிஸியான நடிகராக இருந்த போதும் கூட, தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் கண்டு அரவணைத்து பேசுவதில் இவருக்கு இவரே என்று கூறுகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மாபெரும் கொடை வள்ளல் என்றும் அக்கால நடிகர்கள் இவரை புகழ்வது உண்மையே.
Jaishankar
இந்த சூழ்நிலையில் தான் தனது சினிமா பயணத்தை துவங்கு இருந்த கமலஹாசனுக்கு தனது திரைப்படத்தில் நடன இயக்குனராக வாய்ப்பு கொடுத்து. அதன் பிறகு அவர் நடிப்பு பாதையில் முன்னேறிச் செல்ல பல வகைகளில் உதவியுள்ளார் ஜெய்சங்கர். கமல் முன்னணி நடிகராக மாறிய பிறகு அவருடைய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.