- Home
- Gallery
- Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!
Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் பாரதியாரின் கவிதை புத்தகத்தோடு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லீக்குகளை குவித்து வருகிறது.

எப்படியும் தென்னிந்திய திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதின் உறுதியாக இருப்பவர் ரம்யா பாண்டியன். தன்னை தேடி வரும் படங்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்ளாமல், கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ரம்யா பாண்டியன் தற்போது நம்பி இருக்கும் திரைப்படம் இடும்பன்காரி. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில்... விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. மல்டி ஸ்டார் படமாக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரம்யா பாண்டியனை தேடி ஹோம்லியான காதாபாத்திரங்களே அதிகம் வருவதால், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்தும் விதத்தில், அடிக்கடி அல்ட்ரா மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.
மேலும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன்.. அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் கோவில்களுக்கு செல்வது, வெக்கேஷன் செல்லும் பொது எடுத்து கொள்ளும் புகைப்படத்தையும் வெளியிடுகினார்.
தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறியுள்ளார். கருப்பு நிற சேலையில்... இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளியில் அமர்ந்து, பாரதியின் கவிதை புத்தகத்தை கையில் வைத்து கொண்டும், அதை படிப்பது போன்றும் சில போட்டோஸ் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை...
"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோம்என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.