Asianet News TamilAsianet News Tamil

டிரைலரே அனல்பறக்குதே... தளபதிக்கே தண்ணிகாட்ட தயாரான ஷிவாண்ணா! லியோவை சீண்ட வருகிறது கோஸ்ட்

விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆகும் ஷிவ ராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Shivarajkumar starrer ghost movie trailer released gan
Author
First Published Oct 1, 2023, 4:18 PM IST | Last Updated Oct 1, 2023, 4:21 PM IST

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ஷிவ ராஜ்குமார். இவருக்கு தற்போது தமிழ்நாட்டிலும் மாஸ் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ரஜினிகாந்துடன் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் தான். ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் ஷிவ ராஜ்குமார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு இவரின் கேமியோவும் ஒரு முக்கிய காரணம்.

ஜெயிலர் படத்துக்கு பின்னர் ஷிவ ராஜ்குமாரின் படங்களுக்கு தமிழ்நாட்டில் மவுசு அதிகரித்து உள்ளது. அவரின் கன்னட படங்களையெல்லாம் தேடிப்பிடித்து பார்த்து வரும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கோஸ்ட் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் விருந்து கொடுக்க ரெடியாகி உள்ளார் ஷிவ ராஜ்குமார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஸ்ரீனி இயக்கி இருக்கும் இப்படத்தில் ஷிவ ராஜ்குமார் உடன் அனுபம்கேர், ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் மாஸான பஞ்ச் வசனங்களோடு பிரம்மிப்பூட்டும் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலரின் இறுதியில் இளம் வயது கதாபாத்திரத்தில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் இப்படம் கேஜிஎப்-ஐ போல் பிரம்மாண்ட வெற்றிபெறும் என யூகித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...லட்சத்துக்கு ஆசைப்பட்ட சிவாஜிக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரிவழங்கிய ரஜினி... படையப்பா சீக்ரட்ஸ் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios