MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்

Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்

Sardar 2 Trailer : கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'சர்தார் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது 2022-ல் வெளியான 'சர்தார்' ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகமாகும்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 01 2026, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sardar 2 Trailer
Image Credit : YouTube

Sardar 2 Trailer

நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2022-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சர்தார்' என்ற ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரெய்லரும் மாஸாக ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சர்தார் 2 டீம்
Image Credit : Sony Music South

சர்தார் 2 டீம்

முதல் பாகத்தின் எழுத்துப் பணிகளை பி.எஸ். மித்ரனுடன் சேர்ந்து எம்.ஆர். பொன் பார்த்திபன், ரோஜு, பிபின் ரகு, கீவி ஆகியோர் மேற்கொண்டனர். ஆனால், 'சர்தார் 2' படத்தின் எழுத்துப் பணியை இயக்குநர் ரத்ன குமார், ஆஷமீரா ஐயப்பன் மற்றும் விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். திரைக்கதைக்கான கிரெடிட் 'நம்பி' என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பி.எஸ். மித்ரனின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்தே இவர்கள் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

34
சர்தார் 2 டிரெய்லர் ரிலீஸ்
Image Credit : our own

சர்தார் 2 டிரெய்லர் ரிலீஸ்

'சர்தார்' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட சந்திர போஸ் ஆகவும், இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் ஆகவும் கார்த்தி இந்தப் படத்தில் மீண்டும் மாஸ் காட்டப் போகிறார் என்பதை 1 நிமிடம் 53 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. முதல் பாகத்தில் நடித்த ரஜிஷா விஜயன் இந்த பாகத்திலும் தொடர்கிறார். இம்முறை எஸ்.ஜே. சூர்யாவின் வருகை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இவர்களுடன் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், யோகி பாபு, விடிவி கணேஷ், ஷா ரா, பாபு ஆண்டனி, ஓ.ஏ.கே. சுந்தர், அன்பு தாசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

44
எப்போ ரிலீஸ்?
Image Credit : Twitter

எப்போ ரிலீஸ்?

இசை அமைப்பாளரும் இந்த முறை மாறியுள்ளார். முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். புரொடக்‌ஷன் டிசைனை ராஜீவன் நம்பியாரும், கலை இயக்கத்தை எம்.எஸ்.பி. மாதவன் மற்றும் ஏ.பி. பால்பாண்டியும் கவனித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்‌ஷ்மன் குமாரும், ஐவி என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனாவும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். வரும் செப்டம்பர் 10-ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சர்தார் 2 திரைப்படம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 Trailer Review : ஜெயிலர் 2 டிரெய்லர் பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
Recommended image2
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Recommended image3
Ramayana Trailer: ராமனை விட ராவணன்தான் கெத்தா? ராமாயணம் ட்ரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?
Related Stories
Recommended image1
கார்த்தியின் ‘சர்தார் 2’ ஷூட்டிங் முடிந்தது - ரிலீஸ் எப்போ தெரியுமா?
Recommended image2
சர்தார் 2 படத்தில் இருந்து திடீரென விலகிய யுவன் சங்கர் ராஜா! அவருக்கு பதில் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved