MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • Ramayana Trailer: ராமனை விட ராவணன்தான் கெத்தா? ராமாயணம் ட்ரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

Ramayana Trailer: ராமனை விட ராவணன்தான் கெத்தா? ராமாயணம் ட்ரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

Ramayana Trailer : நாடு முழுக்க ஆவலுடன் எதிர்பார்த்த 'ராமாயணம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவிட்டது. 4 நிமிடம் 10 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரில், என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2026, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ramayana Trailer Review
Image Credit : X

Ramayana Trailer Review

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் 'ராமாயணம்' படத்தின் முதல் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமனாகவும், கன்னட ஸ்டார் யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ராவின் DNEG, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸுடன் இணைந்து யஷும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஜூலை 30 அன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ட்ரெய்லரை வெளியிட்டனர். வழக்கமாக டிரெய்லர்கள் மாலையில் தான் வெளியிடப்படும், ஆனால் அதிகாலையில் வெளியிடப்பட்ட முதல் ட்ரெய்லர் என்கிற பெருமையை இது பெற்றுள்ளது.

இந்தியாவின் காஸ்ட்லி படம் ராமாயணம்.. கோடிகளில் லாபம் ஈட்ட மாஸ்டர் பிளான் போடும் யாஷ்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ட்ரெய்லர் எப்படி இருக்கு?
Image Credit : X

ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ட்ரெய்லரை ராவணன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியே தொடங்குகிறார்கள். 'கர்ஜிக்கும் அரக்க மன்னனாக' யஷ் மிரட்டுகிறார். லங்கா நகரம், புஷ்பக விமானம், ராவணனின் ஆட்சி போன்ற காட்சிகள் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளன. அதன்பிறகு, ஸ்ரீராமனாக ரன்பீர் கபூர் குதிரையேற்றம் செய்வதும், சீதையுடனான காட்சிகளும் அழகாக இருக்கின்றன. சீதையாக வரும் சாய் பல்லவியின் இயல்பான அழகும், அமைதியான நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக, அவரது டயலாக்கை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

ராமாயணா பார்ட் 1 படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமா? நயன்தாரா, ராஷ்மிகா ஷாக்!

34
ட்ரெய்லர் விமர்சனம்
Image Credit : Youtube Screenshot@WorldOfRamayana

ட்ரெய்லர் விமர்சனம்

ஸ்ரீராமர்-சீதை திருமணம், கைகேயியின் முடிவால் அவர்கள் வனவாசம் செல்வது, தசரத மகாராஜாவின் தவிப்பு போன்ற உணர்ச்சிகரமான காட்சிகள் ட்ரெய்லரில் கவர்கின்றன. லட்சுமணனாக ரவி துபே, கைகேயியாக லாரா தத்தா, தசரதனாக அருண் கோவிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணியின் பின்னணி இசை, ட்ரெய்லரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் பிரம்மாண்டம் ட்ரெய்லரிலேயே கண்கூடாக தெரிகிறது.

Yash: உலக புகழ்பெற்ற காவியமான 'ராமாயணத்தை' திரைப்படமாக தயாரிக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ்! வெளியான அறிவிப்பு!

44
எப்போ ரிலீஸ்?
Image Credit : Youtube Screenshot@WorldOfRamayana

எப்போ ரிலீஸ்?

இந்த 4 நிமிட ட்ரெய்லரில் படத்தின் முக்கிய அம்சங்களை காட்டிவிட்டனர். கதை எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், விஷுவல் எஃபெக்ட்ஸ் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள். மேலும், ராவணன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ஆனால் இறுதியில், ராமன் கையால் ராவணன் அழிவது உறுதி. சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தை உலகளவில் வெளியிடுகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் 'சான் டியாகோ காமிக்-கான் 2026' நிகழ்வில் படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிட்டனர். 'ராமாயணம்: பார்ட்-1' இந்த ஆண்டு தீபாவளிக்கு, நவம்பர் 5ந் தேதி அன்று வெளியாகிறது. ராமாயணம் படத்திற்காக நடிகை சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அவரின் கெரியரில் அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் ஆகும்.

அவரையும் கூடவே அழைச்சிட்டு போறேனா? வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிரெய்லர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kara Trailer: வங்கிக் கொள்ளையனாக தனுஷ்! வளைகுடா போர் பின்னணியில் ஒரு த்ரில்லர்!
Recommended image2
கேசரி தான்... கேசரியே தான்..! ஜனநாயகன் ட்ரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Recommended image3
திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved