MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Yash: உலக புகழ்பெற்ற காவியமான 'ராமாயணத்தை' திரைப்படமாக தயாரிக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ்! வெளியான அறிவிப்பு!

Yash: உலக புகழ்பெற்ற காவியமான 'ராமாயணத்தை' திரைப்படமாக தயாரிக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ்! வெளியான அறிவிப்பு!

'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

3 Min read
manimegalai a
Published : Apr 12 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது. 

 

28

தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக இந்த தொன்மை வாய்ந்த கதையை பெரிய திரையில் கொண்டு வருவதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். உலகளாவிய சூப்பர் ஸ்டார் யாஷ்ஷை சந்தித்து தனது லட்சியங்களை குறித்து விவாதித்திருக்கிறார்.‌ அதன் போது யாஷ்ஷின் உணர்வும் இவருடன் ஒத்திருந்ததை அறிந்தார். மேலும் இரண்டு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு வருவதற்கான லட்சியத்துடன் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

Pradeep Ranganathan Salary: இரண்டே படத்தில்... 10 மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! 
 

38

பிரபல இயக்குநர் நித்தேஷ் திவாரி-  DNEG நிறுவனத்துடன் இணைந்து, இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் ஆகியோருடன் இணைந்துள்ளார். இவர்கள் இணைந்து இந்திய புராணங்கள் மற்றும் கதை சொல்லும் மரபுகளில் காலத்தால் அழியாத அணுகுமுறையை உலக அரங்கில் வெளிப்படுத்த... ஒரு மகத்தான பயணத்தை தொடங்கியுள்ளனர். 
 

48

இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா பேசுகையில், '' அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகாலம் வாழ்ந்து.. மற்ற நிறுவனங்களை விட கடந்த பத்து ஆண்டுகளில் இணையற்ற வணிக வெற்றியையும், அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரு வணிகத்தையும் உருவாக்கினோம்.‌ எனது தனிப்பட்ட பயணமும் என்னை வழிநடத்தியது. ராமாயணத்தின் வியக்கத்தக்க அளவிலான கதைக்கு நியாயம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை உரிய கவனிப்புடனும், மரியாதையுடனும் அணுகுகிறேன். 

Romeo Day 1 Box Office: விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' வசூலில் கெத்து காட்டியதா? முதல் நாள் கலெக்ஷன் நிலவரம்!
 

58

தொடக்கத்தில் இருந்தே எனது சவால்கள் இரண்டு மடங்குகளாக இருந்தன. ஒரு கதையின் புனித தன்மையை மதிப்பது.. அதனுடன் வளர்ந்த நம் அனைவராலும், இதனை ஆச்சரியப்படும் வகையில் அதை உலகிற்கு கொண்டு வருவது.. இந்தக் கதையை சர்வதேச பார்வையாளர்கள் பெரிய திரை அனுபவமாக ஏற்றுக்கொள்வர். கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் உயிரை சுவாசிக்கும் அவரது மறுக்க முடியாத திறனுடன் யாஷ் ஒரு சர்வதேச அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தீவிர ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் தனது அனைத்து படங்களின் ஆக்கபூர்வ தயாரிப்பாளராக யாஷ் பல புதுமைகளையும், அனுபவத்தையும் கொண்டு வருகிறார். அவர் ஈடுபடும் ஒவ்வொரு திட்டமும் பார்வையாளர்களிடம் ஆழமான அளவில் எதிரொலிக்கிறது.'' என்றார். 
 

68

நமது கலாச்சாரத்தின் தனித்துவமான சிறந்த விசயங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆசையை... யாஷ்ஷை சந்தித்தபோது அவரிடமும் இருந்ததை நான் உணர்ந்தேன். கர்நாடகாவிலிருந்து 'கே ஜி எஃப் 2' வின் நம்ப முடியாத சர்வதேச வெற்றிக்கான அவரது பயணத்தால் ஈர்க்கப்பட்டு, எங்களின் எல்லா கதைகளிலும் மிகப்பெரிய உலகளாவிய தாக்கத்தை உருவாக்க உதவும் இவரை தவிர, சிறந்த கூட்டாளரை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

Anikha: இந்த மாதிரி கேள்வி என்கிட்ட கேட்காதீங்க! எனக்கு 17 வயசு தான் ஆகுது...எல்லை மீறியதால் கடுப்பான அனிகா!
 

78

ராக்கிங் ஸ்டார் யாஷ் பேசுகையில், '' இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதை  நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன். இந்நிறுவனத்தின் பின்னணியில் சக இந்தியர் ஒருவர் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல்வேறு அமர்வுகளில் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இதன் போது தற்செயலாக இந்திய சினிமாவுக்கான தொலைநோக்குப் பார்வையில் எங்களின் கருத்தாக்கம் சரியாக இணைந்தது. நாங்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தோம். இந்த விவாதங்களின் போது ராமாயணமும் இடம்பெற்றது. நமித் தன்னுடைய வேலைக்கான அட்டவணைகளில் இதனை ஒரு பகுதியாக கொண்டிருந்தார். ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. அதற்காக என் மனதில் ஒரு அணுகுமுறையும் இருந்தது. ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம். 
 

88

ரசிகர்களை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தும் படைப்பு மற்றும் சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது.மேலும் அனுபவமிக்க இரண்டு தயாரிப்பாளர்களும் இப்படத்திற்காக இணைந்திருக்கின்றனர். நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.

Kizhakku Vaasal: கதாநாயகியால் வந்த பிரச்சனை? ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி கிழக்கு வாசல் சீரியல்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved