MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • Jailer 2 Trailer Review : ஜெயிலர் 2 டிரெய்லர் பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ

Jailer 2 Trailer Review : ஜெயிலர் 2 டிரெய்லர் பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ

Jailer 2 Movie Trailer Decoding : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 05 2026, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jailer 2 Trailer Review
Image Credit : sun pictures

Jailer 2 Trailer Review

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ஜெயிலர் 2. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இதற்கு முன்னதாக இவர்கள் காம்போவில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜெயிலர் 2-வில் இத்தனை நட்சத்திரங்களா?
Image Credit : X

ஜெயிலர் 2-வில் இத்தனை நட்சத்திரங்களா?

ஜெயிலர் 2 திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆவதால், இதில் கோலிவுட்டில் இருந்து விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, மிர்ணா, ரம்யா கிருஷ்ணன், டோலிவுட்டில் இருந்து சுமன், மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால், கன்னட திரையுலகில் இருந்து சிவராஜ் குமார், பாலிவுட்டில் இருந்து வித்யா பாலன், ஹிருத்திக் ரோஷன், நோரா ஃபதேகி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

35
ஆடியோ லாஞ்ச் இல்லாமல் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் 2
Image Credit : X

ஆடியோ லாஞ்ச் இல்லாமல் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் 2

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனபோது அதன் ஆடியோ லாஞ்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதனால் ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்சிலும் அவரின் ஸ்பீச் வைரலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு ஆடியோ லாஞ்சே வைக்காமல் அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அதற்கு பதிலாக, ரேவ் என்கிற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில் அனிருத், படத்தின் பாடல்களை பாடினார். இந்த இசை நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் மட்டும் கலந்துகொண்டார்.

45
ஜெயிலர் 2 டிரெய்லர் ரிலீஸ்
Image Credit : x

ஜெயிலர் 2 டிரெய்லர் ரிலீஸ்

ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்சுக்காக எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு அல்வா கொடுத்த நிலையில், அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக அனைவரும் வெயிட்டிங்கில் இருந்தனர். அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் என்பது டிரெய்லரிலேயே கண்கூடாக தெரிகிறது. அதோடு, ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அனல்பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் ஏராளமாக உள்ளன.

ஏன் ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட பெஸ்ட்? முத்துவேல் பாண்டியனின் விஸ்வரூபமும், இறங்கி அடிக்கும் நெல்சனும்!

55
டிரெய்லர் விமர்சனம்
Image Credit : sun pictures

டிரெய்லர் விமர்சனம்

ஜெயிலர் முதல் பாகத்தில் விநாயகனை கொன்ற ரஜினிகாந்த், அவனுக்கும் மேலே ஒருத்தன் இருக்கான் என தெரிந்துகொண்டு, அவனை தேடுகிறார். அந்த நபர் வேறுயாருமில்லை சுராஜ் தான். அவருக்கு பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா நெட் ஒர்க்கே இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கேங்கில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் என அனைவரையும் ஒரே இடத்திற்கு வர வைத்து அவர்களை ரஜினி எப்படி அழிக்கிறார் என்பது தான் ஜெயிலர் 2 படத்தின் கதை.

ஜெயிலர் முதல் பாகத்தைப் போல இதிலும் யோகிபாபுவின் டைமிங் காமெடிகள் நிறைய இருக்கும் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பேசஞ்சர் எல்லாரையும் கொன்னுட்டு கார துடைக்கிற... நல்லா துடை என அவர் பேசும் கவுன்டர் டயலாக்ஸ் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இதில் ரஜினியை பார்த்து யோகிபாபு சொல்லும் மற்றொரு டயலாக் உள்ளது. அதில், 8 மணிக்கு வர சொன்னா 7 மணிக்கே வர்ற போ என சொல்வார். இது ரஜினியை கலாய்க்கும் விதமாக வைத்துள்ளார் நெல்சன். ரஜினிகாந்த் எப்போதுமே ஷூட்டிங்கிற்கு சீக்கிரம் வந்துவிடுவாராம். அதை கலாய்க்கும் விதமாக இந்த டயலாக் வைத்திருக்கிறார் நெல்சன்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
ரஜினிகாந்த்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Recommended image2
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Recommended image3
Ramayana Trailer: ராமனை விட ராவணன்தான் கெத்தா? ராமாயணம் ட்ரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?
Related Stories
Recommended image1
Jailer 2 : ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்ததா விஜய் அரசு? புயலை கிளப்பிய Jailer 2 Rave அறிவிப்பு
Recommended image2
இந்தியன் 2 டூ சர்தார் 2 வரை... வரிசைகட்டும் தோல்விகள்: எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் கிராஃப் சரிந்தது ஏன்? ஜெயிலர்-2 தப்புமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved