Actor Kavin : நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
திருச்சியில் கடந்த 1990ம் பிறந்த நடிகர் தான் கவின், சின்னத்திரை நாடகங்களில் இருந்து தனது கலைப்பயணத்தை துவங்கிய கவின், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்வு பெற்று வருகின்றார் என்றே கூறலாம். கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற கவினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் "பீட்சா" திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான கவின், "இன்று நேற்று நாளை" மற்றும் "சத்ரியன்" ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு முதன்முதலில் கடந்த 2019ம் ஆண்டு "நட்புன்னா என்னனு தெரியுமா" என்ற படத்திலிருந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கவினுக்கு வந்தாலும், சிறந்த கதை அம்சங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார் கவின் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா ஆகிய இரு திரைப்படங்களின் மிகப்பெரிய அளவில் கவினுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் இலன் என்பவர் இயக்கத்தில் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமான படத்தில் இப்பொது நடித்து வருகின்றார் நடிகர் கவின். ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கவினுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அப்பட ட்ரைலர் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.
இந்த சூழலில், அண்மையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கவினிடம் "நீங்க தான் அடுத்த தளபதி என்று கூறுகிறார்களே அது உண்மையா? என்று கேட்க, "நான் இந்த இடத்திற்கு வருவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது, இது என் 12 ஆண்டு போராட்டம், இப்படி எல்லாம் பேசி அதை முடிச்சுவிட்றாதீங்க" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
