MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குடியரசு தலைவர் கைகளால் தேசிய விருதை வாங்கிய ஸ்ரீகாந்த் தேவா, மாதவன், ராஜ மௌலி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள்!

குடியரசு தலைவர் கைகளால் தேசிய விருதை வாங்கிய ஸ்ரீகாந்த் தேவா, மாதவன், ராஜ மௌலி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள்!

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா, இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில்.. இதில் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் மாதவன், ஸ்ரேயா கோஷல், ராஜமௌலி உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் குடியரசு தலைவர் கைகளால், விருதுகளை வென்றனர். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 17 2023, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

இந்திய அரசு ஓவ்வொரு ஆண்டும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஆனால் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வழங்கப்படும் தேசிய விருதுகள், கொரோனா தொற்று காரணமாக தாமதமாக வழங்கப்பட்டன.

29

இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில், 24 பிரிவின் கீழ் தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த முறை அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள், தமிழ் திரையுலகை  சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

Allu Arjun: 'புஷ்பா தி ரைஸ்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் அல்லு அர்ஜுன்!

39

காரணம் கண்டிப்பாக தேசிய விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன்  போன்ற படங்கள் ஒரு பிரிவில் கூட தேசிய விருது கிடைக்காமல் போனது.

49

ஆனால் கொஞ்சம் ஆறுதல் படும் விதத்தில், சிறந்த தமிழ் திரைப்படம் என்கிற பிரிவில் 'கடைசி விவசாயி' திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில், இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

Alia Bhatt: 50 லட்சம் மதிப்புள்ள திருமண சேலையில் வந்து... தேசிய விருது வாங்கிய ஆலியா பட்! வீடியோ

59

மேலும் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற மாயாவா சாயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு, சிறந்த பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டது. 

69

அதே போல் கருவறை என்கிற ஆவணப்படத்திற்கு இசையமைத்த, ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், சிறந்த கல்வி திரைப்படம் என்கிற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

மாதவிடாய் நேரத்திலும் காம வெறியில் உடலுறவு! துயர வாழ்க்கையின் உச்சம்.. கண்ணீர் விட்டு கதறிய மிருணாள் தாகூர்!

79

இதைத் தவிர நடிகர் மாதவன் நடித்து -  இயக்கிய 'ராக்கெட்ரி' படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. அதேபோல் ஹிந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார்.  சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்குபாய் காத்தியவாடி'  படத்தில் நடித்த நடிகை அலியா பட்க்கு வழங்கப்பட்டது.

89

மேலும் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம், அதிக பட்சமாக 6 தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இன்று விக்யான் பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!

99

இதை தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்ட பிரபலங்கள் அனைவரும் குடியரசு தலைவர் கைகளால் விருதுகளை பெற்றுக்கொண்டனர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராஜமௌலி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved