Alia Bhatt: 50 லட்சம் மதிப்புள்ள திருமண சேலையில் வந்து... தேசிய விருது வாங்கிய ஆலியா பட்! வீடியோ
நடிகை ஆலியா பட் தன்னுடைய திருமணம் சேலையில் வந்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் தேசிய விருதை பெற்றார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு, சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகைக்கான விருது பாலிவுட் நடிகை அலியா பட்டுக்கு 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்காக அறிவிக்கப்பட்டது.
இன்று தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்ம், தன்னுடைய கணவர் ரன்பீர் கபூருடன் அலியா பட் டெல்லிக்கு புறப்பட்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை தொடர்ந்து, சற்று முன்னர், அலியா பட் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால், தேசிய விருதை பெற்றார்.
லியா பட் நடித்த இந்த படத்தை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். நடிகையாக வேண்டும் என ஆசை படும் ஆலியா பட்டை காதலித்து ஏமாற்றி மும்பையில் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகிறார். பின்னர் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கும் இவர் எப்படி கங்குபாய்-யாக மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதை. அலியா பட் மிகவும் அற்புதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த விருதினை பெற அலியா பட் , தன்னுடைய 50 லட்சம் மதிப்புள்ள திருமண சேலையை அணிந்து வந்து பெற்றார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து, தேசிய விருதுகள் ஓவ்வொரு பட்டியலின் அடிப்படியில் தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.