Allu Arjun: 'புஷ்பா தி ரைஸ்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் அல்லு அர்ஜுன்!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, குடியரசுத் தலைவர் கையிலிருந்து பெற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
69-வது தேசிய விருதுகள், கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் 2021-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றும் முதல் நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனை வந்தடைந்தது.
டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில், தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற அல்லு அர்ஜுன் தன்னுடைய மனைவி சினேகாரெட்டியுடன், நேற்று டெல்லிக்கு சென்றார்.
Alia Bhatt: 50 லட்சம் மதிப்புள்ள திருமண சேலையில் வந்து... தேசிய விருது வாங்கிய ஆலியா பட்! வீடியோ
இதை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும், தேசிய விருது விழா நிகழ்ச்சியில்... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்று கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
புஷ்பா படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார். செம்மரம் கடத்தும் தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் கெத்து காட்டியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.